எங்கள் பரவர் சமூதாயத்தை பற்றி இணையத்தில் தேடியபோது சர்மலன் தேவர் அவர்கள் தனது இனையதள பக்கத்தில் பகிர்ந்த பதிவு.

 எங்கள் பரவர் சமூதாயத்தை பற்றி இணையத்தில் தேடியபோது சர்மலன் தேவர் அவர்கள் தனது இனையதள பக்கத்தில் பகிர்ந்த பதிவு.


பதிவு லிங்:

https://sharmalanthevar.blogspot.com/2013/06/the-paravars-ancient-tamil-tribe.html


கட்டுரை ஆங்கிலத்தில் உள்ளது. Google translate வழியாக தமிழ் மொழி என்று மாற்றி தமிழில் இக்கட்டுரை படிக்கலாம்.


தமிழகத்தில் இன்றும் காணப்படும் பழங்கால பழங்குடியினரில் பரவர் இனக்குழுவும் ஒன்று! அவர்கள் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி இராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் பரவலாக காணப்படுகின்றனர். தமிழ் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, அகநானூறு, மதுரை காஞ்சி, பட்டின பாலை ஆகியவை பரவர்களின் வாழ்க்கையை பற்றி கூறுகிறது. பரவர்கள் பரதவர் அல்லது பரதர் என்றும் அழைக்கப்படுகின்றனர். 


பாண்டிய மன்னன் காலத்தில் பரவர்கள் முத்து வியாபாரம் செய்தனர். மேலும் அவர்கள் கடல் வணிகத்தில் ஈடுப்பட்டனர். சுறா மற்றும் பெரிய மீன்களை வேட்டையாடுதல் பற்றி கூறுகிறார்.


மேலும் பரவர்கள் கடலோர கிராமங்களில் (நெய்தல்) பகுதிகளில் மற்றும் மறவர்கள் பாலை (பாலைவன) பகுதிகளில் வாழ்ந்தனர்.


மேலும் அவர் கூறிப்பிட்டது "" அவர்கள் எனது குலமான மறவர்களுடன் தொடர்பு உடையவர்கள் என்று நம்பப்படுகிறது. மறவர்களுக்கும் பரவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்தல் வேண்டும் "" என்ற கருத்தை முன் வைக்கிறார்.


இரு சமூகத்திற்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது பற்றிய ஆதாரங்கள் அடங்கிய கட்டுரை கீழே உள்ளது.


1532 க்கு பிறகு பரவர் சமூகம் பிற நாட்டு படைகளால் ஒடுக்கப்பட்டு பின்னர் அந்த பிற நாட்டு படைகளை இம் தமிழக மண்ணில் இருந்து அகற்றி ,வென்று   கிருஸ்தவ மறையை ஏற்றனர்.  அதற்காக உதவிய போர்ச்சுகீசிய படைகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கிருஸ்தவ மறையை ஏற்ற பின்னர்  இரு சமூகத்திற்கு இடையேலான உறவு சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. 


ஆனால் "உங்கள் மீனவன் மூக்கையூர் " ஊரில் முன் காலத்தில் மறவர் மற்றும் பரவர் இடையே மிக நெருக்கமான உறவு இருந்ததை முன்னோர்கள் வழியாக அறிய முடிகிறது.


youtube link 

https://www.youtube.com/channel/UCDWy-8Zcv-qr45CfY6-9ebg


மறவனின் உரிமைகள் சில பரவனிடம்


1) பாண்டியாபதி இறந்து போனால்  ஆப்பநாடு  மறவர் மட்டுமே  சடங்கு செய்ய முடியும் . பாண்டியாபதி என்பவர் பரவர்களின் மன்னன் ஆவார்.இவரின் ஆட்சியின் கீழ் பல பரவர் கிராமங்கள் இருந்தன.


பாண்டியபதி மன்னர் பற்றி தகவல்


 அறிய லிங்.

 அறிய லிங்.

https://m.facebook.com/story.php?story_fbid=1383920029178602&id=100026818533121


https://m.facebook.com/story.php?story_fbid=1142312416672699&id=100026818533121


பாண்டியபதி வழக்கு ஆங்கிலேய ஆட்சியில் இல்லாமல் போனது . காரணம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக படையுதவி மற்றும் வெடிபொருட்கள் உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆங்கிலேயரால் தேடிப்பட்டு வந்தார் அப்போதைய பாண்டியபதி மன்னர்  ! பிறகு மணப்பாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் .

அவர் தான் சுதந்திர போராட்ட வீரர் தேர் மாறன்.

இப்போது 2024 யில்

ஆஸ்திரேலியாவில் இருக்கும் கடைசி தலைமுறை பாண்டியபதி வாரிசு வீடியோ லிங்.

https://m.facebook.com/groups/244957125136836/permalink/245911301708085/


2) மூக்கையூரில் 60 வருடம் முன்புவரை பரதகுல திருமண சடங்கில் முதல் பந்தியான சொக்காரன் பந்தியில்  உடன் சொக்காரனும் ஆப்பநாடு  மறவன் மட்டுமே  அமர்ந்து  சாப்பிட முடியும் .


3)மூக்கையூர் பரதவர் திருமணத்திற்கு  சாயல்குடி  மைனர் வீட்டில்  இருந்து  குடை சுருட்டி வந்தால் மட்டுமே   மாப்பிள்ளை  வீட்டில்  இருந்து  கிளம்புவார் 60 வருடம் முன் வரை.


மறவனிடம் பரவனுக்கு இருந்த உரிமை

 

ஆப்பநாடு  பஞ்சாயத்தில் தீர்க முடியாத மிக சிக்கலான  பிரச்சனைகளில் பரதவ தலைவர்கள்  அமர்வார்கள்

அப்படி  பஞ்சாயத்த்தில் கடைசியாக  அமர்ந்த பரவர்கள் பாண்டியன்  பர்னாந்து,  தங்ககட்டி சேசு, கருப்பட்டி ஜோசப், தனுஷ்  பூபாலராயர். 


 


கீழ் காணும் கட்டுரை வெளிநாட்டு அறிஞர்கள் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட தகவல். அதை தொகுப்பு செய்து கட்டுரையாக எழுதியவர் வரலாற்று ஆசிரியர் uni uni. அவரை தொடர்பு கொள்ள லிங் :

https://www.facebook.com/Uni.Unij


#மறவர்_பரவர் இனக்குழுக்களுக்கு இடையே உள்ள நெருங்கிய உறவு

கிபி 17 ஆம் நூற்றாண்டில் "ஜான் நியூஹோஃப்" என்னும் டச்சு பயணி தமது நூலில்... தலைமை இடம் #பெரியபட்டிணம்" என்று குறிப்பிடுகிறார். 


"ரெவரென்ட் பசௌட்" என்னும் ஆங்கிலேயர், கிபி1763 ஆம் ஆண்டு, லண்டனில் பதிபிக்கபட்டு, ராபர்ட் மவுண்டேக், ஜான் முர்ரே ஆகிய பிரபுக்களுக்கு சமர்பிக்கபட்ட தமது நூலில்.... 

"(திருநெல்வேலி)பரவர் நாட்டுக்கு வடக்கே உள்ள சேதுநாட்டில் மறவர், பரவர் இனக்குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் வசம் கோட்டைகள் அமைக்கப்பட்ட தீவுகள் உள்ளன " என்று குறிப்பிடுகிறார். 


காலம் செல்ல செல்ல, மறவர் தலைவர்கள், தங்களது ரெத்த சகோதரர்களான பரவர்களையும் தங்கள் அரசில் இனைத்து கொண்டனர். 


மறவர்களின் தலைமையிடம்  பெரிய பட்டிணம் ஆகும்.

இதன் காரணமாக சேதுநாட்டு மறவர், பரவர் ஆகிய இருவருக்கும் பொதுவான தலைமை இடமாக  #பெரியபட்டிணம் மாறிப்போனது.

இதனை "மலாச்சி போஸ்ட்லெத்வேட்" என்னும் ஆங்கிலேயர், கிபி1755 ஆம் வருடம், லண்டனில் பதிபிக்கபட்ட தமது நூலில் பதிவு செய்கிறார்.


சேதுநாட்டு மறவர் இனக்குழுவின் தொன்மை:-

ஆங்கிலேய அரசு அதிகாரி "ஹக் நெவில்" தமது நூலில்.... 

"சேதுநாட்டு மறவர்கள் முன்பு பரவர்களுள் வணிகம், மீன் வேட்டை ஆகியவற்றை செய்து வந்தவர்களாய், பின்பு தனி இனக்குழுவாக பிரிந்து சென்றனர்" என்று குறிப்பிடுகிறார். 


இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக பழங்கால தமிழ் ஓலைச்சுவடி ஒன்றில் "சேதுநாட்டு மறவர்கள், பரதவ(மீனவ) குடிகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஓலைச்சுவடியை "கர்னல் காலின் மெக்கென்ஸி" சேகரித்து, பின்பு இது "வில்சன்" என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது. 

_____________________________

ஆதாரம்:-

1.Voyages and Travels to East Indies and Brazil by John Nieuhof Vol ll pg.258

2.Historico-political Geography by Mr Paschoud Vol ll, pg.181 

3.Universal Dictionary of Trade and Commerce by Malachy Postlethwayt

4.Oriental Studies by Hugh Neville Vol l pg.19

5.The mechenzhi collection of oriental manuscripts by H. H. Wilson pg.207


முழுமையான கட்டுரை லிங்: 

கட்டுரை லிங்: 

https://www.facebook.com/Uni.Unij/posts/1368934800677125


https://www.facebook.com/photo/?fbid=1368934554010483&set=pcb.1368934800677125


#தேவர் பட்டம் கொண்டிருந்த பரவர்கள்: 


உலக புகழ்பெற்ற ஜெர்மானிய வரலாற்று ஆசிரியரும், ஏசுசபை குருவானவருமான "ஜார்ஜ் ஷுர்ஹாம்மர்" என்பவர் கிபி1542 ஆம் வருடம் இந்தியா வந்திருந்த ஸ்பானிஷ் மிஷனரி புனித பிரான்சிஸ் சேவியரின் கடிதங்களையும், குறிப்புகளையும் தமது "புனித பிரான்சிஸ் சேவியர் வாழ்க்கை வரலாறு" என்ற நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். 


"ஜார்ஜ் ஷுர்ஹாம்மர்" தமது புனித பிரான்சிஸ் சேவியர் வாழ்க்கை வரலாறு நூலில் பரவர்களின் #தேவர் பட்டத்தை பற்றி கூறும்போது...... 

"#தேவர் பட்டம் என்பது முன்பு பரவர் சமூகத்தில் பொதுவான பட்டமாக இருந்திருக்கிறது. 


(எ.கா) #வெள்ளையாத்_தேவர், #காத்தவத்_தேவர், #மன்னத்_தேவர், #மதிப்புத்_தேவர் என்று இப்படி பல தேவர்கள் இருந்தனர்" என்று குறிப்பிடுகிறார். 

"எஸ்.வெனான்சியுஸ்" என்ற வரலாற்று ஆசிரியரும், பாதிரியாருமானவர் அக்கால போர்சுகீசியர்கள் மற்றும் ஏசுசபை பாதிரியார்களின் கடிதங்களையும், குறிப்புகளையும் தமது "இடியின் இரகசியம்" என்ற நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். 


நான் மேற்கூறிய இந்த எஸ். வெனான்சியுஸ் அவர்கள் தமது நூலில் கோவா போர்ச்சுகீசிய ஆவணத்தை ஆதாரமாகக்கொண்டு, கிபி1603 ஆம் வருடம் புண்ணைகாயலில் நடந்த பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பரதகுல தலைவர்களின் பெயர்களை பதிவு செய்துள்ளார். 


அவற்றுள் ஒரு பரதகுல தலைவரின் பெயர்.... 

"தொம்மை டி குருஸ் #வீர_நாராயணத்_தேவர்"

என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 


கோவைக் குளம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி  ஊரில் அருகில் உள்ள கோவளம் மீனவ கிராமம் ஆகும்.இது பண்டைய காலத்தில் கோவைக் குளம் என்று அழைக்கப்படுகிறது.

தென்கோவை, கோவைக் குளம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பரவர்களின் நாஞ்சிவள நாட்டு கோவளம் நகரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த "செண்பகராமன் காலிங்கராயன்" என்ற பரதகுல அரசன் மீது பாடப்பட்ட தமிழ் சிற்றிலக்கிய வகையுள் ஒன்று "செண்பகராமன் பள்ளு" ஆகும். 


இந்த செண்பகராமன் பள்ளு பக்.32 யில், நான் மேற்கூறிய நாஞ்சிவள நாட்டு தென்கோவையூர் பரவர்கள் கோட்டார் புனித பிரான்சிஸ் சேவியர் கோயிலுக்கு உதவியதை பற்றி........ 


"சந்த விஞ்ஞாசியு சீஷன் சவேரியார் தமது கோவில் திருமதில் செய்ய முந்த வேசிப்பி நீறு சுடக்கட்டை  முட்ட வேற்றின வண்டி லிழுக்க அந்த மாகிய தென்கோவை யூர்ப்பதி ஆண்ட #தேவமார் எல்லாருங் கூடி வந்து தான்கொண்டு போனக டாநூறு வஞ்ச கமல்லா என்னணை யாண்டே " 

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


பரவர் சமூகத்தவர்கள் கிபி1532 ஆம் வருடம் முதல் கத்தோலிக்கர்களாக மாறிய பிற்பாடு தங்களுடைய குல பட்டங்களை அரிதாகவே போட்டுக்கொண்டு வந்தனர். 


இப்படி தான் இந்த #தேவர் பட்டமும் பரவர் சமூகத்தில் இருந்து மறைந்து போனது.


வில்லவராயர், காலிங்கராயர், கங்கர் ,பூபாலராயர் போன்ற பட்ட பெயர்களை போட்டுக்கொண்டு வந்த பரவர்களும் தங்களுடைய பிள்ளைகளுக்கு அக்குல பட்டப்பெயர்களை சூட்டுவது இன்று அரிதாகவே இருக்கிறது. 


இப்படி பரவர் சமூகத்தவர்கள் கத்தோலிக்கர்களாக மாறிய பிற்பாடு அவர்களுடைய வாழ்வியல் சான்று பலது அழிந்து போயிருக்கிறது. 

००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

ஆதாரம்:-

St. Francis Xavier his life, his times by George Schurhammer Vol 2 Pg. 328

இடியின் இரகசியம் எஸ். வெனானசியுஸ் பக். 32

செண்பகராமன் பள்ளு பக். 103


முழுமையான கட்டுரை லிங்: 

https://www.facebook.com/Uni.Unij/posts/1393653334871938


#தலைவனார் பட்டம் கொண்ட சமூகத்தவர்கள்:


தலைவனார் பட்டபெயரானது பரவர், மறவர் சமூகத்தவர்களுக்கு காலம் காலமாக வழங்கிவந்த ஒன்றாகும். 


அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை நாம் இப்பதிவிலே பார்ப்போம்... 

"பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்  கட்டபொம்மு நாயக்கர் கிபி1799 ஆம் ஆண்டில், அக்டோபர் 16 ஆம் தேதி தூக்கிலிடப்படுவதற்கு பல மாதங்கள் முன்பே அவருடன் கூட்டணி வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள் சிலரை ஆங்கிலேய அரசுக்கு எதிராக மறைத்து பாதுகாப்பு அளித்தவர் ராஜா டான் கேபிரியேல் டி குருஸ்(1779-1808) என்ற பாண்டியபதி.


எனவே திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்த "ஸ்டீபன் லூஷிங்டன்" நான் மேற்சொன்ன "ராஜா டான் கேபிரியேல் டி குருஸ்" என்ற பாண்டியபதியை கிளர்ச்சியாளராக அறிவித்திருந்தார்.


இந்த சமயத்தில் பாண்டியபதி ராஜாக்களை எப்படியேனும் ஒழிக்க வேண்டும் என்று காத்துகொண்டிருந்த பத்தொன்பது முக்கிய நபர்களை  கொண்ட தூத்துக்குடி பரவர் குழு ஒன்று அவருடைய ஆட்சியை நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மேற்கொண்டது.


கிபி1799 பிப்ரவரி 4 ஆம் நாள் நான் மேற்கூறிய பத்தொன்பது பரவர்களும்

பாண்டியபதி ராஜாவுக்கு எதிராக பதினான்கு பொய் குற்றச்சாட்டுகளை தயார் செய்து அனைவரும் அதில் கையொப்பமிட்டு அந்த மனுவை திருநெல்வேலி ஜில்லா கலெக்டரான "ஸ்டீபன் லுஷிங்டன்" பிரபுவிடம் சமர்பித்தனர்..... 


அவற்றுள் நான்காவது குற்றச்சாட்டு என்னவெனில்...

"அவர்(பாண்டியபதி ராஜா) தமக்கு அடுத்த நிலை பதவி வகித்த #தலைவனார்'களை அவமதித்தார்" என்று குறிப்பிடபட்டுள்ளது.

இதன்மூலம் பரவர்களுள் #தலைவனார் பட்டம் கொண்ட நபர்கள் பாண்டியபதி ராஜாவுக்கு அடுத்த நிலை அந்தஸ்தில் இருந்தனர் என்பது தெளிவு. 


மறவர்களிடையே #தலைவனார் பட்டபெயர் வழங்கிவந்ததை பற்றி கிபி1909 ஆம் ஆண்டில், ஆங்கிலேய மானிடவியலாளர் "எட்கர் தர்ஸ்டன்" தமது நூலில் முதலாம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

நான் மேற்சொன்னவைகள் மூலம் #தலைவனார் பட்டபெயர் பரவர்களுக்கும், மறவர்களுக்கும் உரியது என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.


००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

ஆதாரம்:-

1. Caste and Tribes of South India by Edgar Thurston Vol 7 Pg. 1

2. Saints, Goddess and Kings by Susan Bayly. Pg 353,355


முழுமையான கட்டுரை லிங்: 

https://www.facebook.com/Uni.Unij/posts/1384923442411594


பரவர்கள் ,விஜயநகர பேரரசுக்கு அடிபணியவில்லை ! பரவர் மற்றும் விஜயநகர பேரரசுக்கும் இடையே நடந்த இரண்டு மாத போரில் பரவரை வெற்றி கொள்ள முடியவில்லை. எனவே பரவர்கள் விஜயநகர பேரரசுக்கு அடிபணிய வில்லை!!


இதேபோல் மதுரை மாநகரை சுற்றி இருக்கும் #கள்ளர் நாடுகளை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வர விஜயநகர நாயக்கர்களால் இயலவில்லை. தமிழ் கள்ளர்கள் நாயக்க அரசுக்கு பெரிதும் அச்சுறுத்தலாகவே இருந்தனர்.


தமிழர் அனைவரும் விஜயநகர பேரரசுக்கு அடிபணியவில்லை என்பதை தெளிவாக அறிய முடிகிறது. 


முழுமையான கட்டுரை லிங்: 

https://www.facebook.com/Uni.Unij/posts/1143721199865154


பாண்டிய பேரரசு மற்றும் சோழ பேரரசின் போர்படைகளில் பரவர் பணியாற்றிய சங்க இலக்கியங்களில் உள்ள தகவல்கள்:

 #தென்_பரதவர்_போர்_ஏறே

#தென்பரதவர்_மிடல்_சாய  


முழுமையான கட்டுரை லிங்: 

https://www.facebook.com/PozhikaraiOfficial/posts/797785692377209


பரவர் மற்றும் மறவர் வாழ்க்கை முறையை பற்றி சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளன.சங்க கால பாடல்கள் , இரு சமூகமும் போர் குடிகளாக பாடுகிறது . மேலும் அரச படைகள்களில் பணியாற்றி உள்ளனர்.

 

மேலும் இதை உறுதி படுத்தும் விதமாக கிபி 1606 யில் தங்கள் பகுதிகளை காப்பாற்றி கொள்ள தங்களுக்கு என்று படை பலம் வைத்து இருந்தனர் என்பதை விஜயநகர பேரரசு மூலம் அறியலாம்.


விடுதலை (விடுதலை) என்ற பாரதியார் பாடலின் பின்வரும் வரிகளைப் படித்ததன் மூலம்  


பரவ ரோடு குறவருக்கும்


மறவ ருக்கும் விடுலை;


இம்மூன்று இனங்களும் பழங்கால பூர்வகுடி தமிழ் சமூகங்கள் ஆகும். சங்க இலக்கிய பாடல்களில் இம்மூன்று இனங்களை பற்றிய தகவல்கள் அதிகமாக உள்ளது.


குறவர் சமூகம் பழங்காலத்தில் தங்களுக்கு என்று அரசரை வைத்து இருந்தனர். அதற்கான லிங்.


https://www.facebook.com/photo?fbid=844038514142251&set=a.10447791809831822:

 

Comments

Popular posts from this blog

சங்கத் தமிழரின் சுறா மீன் வேட்டை.