சங்கத் தமிழரின் சுறா மீன் வேட்டை.


திருவிளையாடல் படத்தில் சிவாஜி சிவனாக வந்து, சுறாவினைக் கொன்று சாவித்திரியை மணக்கும் காட்சி வரும். அது வெறும் கற்பனை காட்சி அல்ல. சங்க இலக்கியமும் அதனைப் பற்றி கூறியுள்ளது.
கணக்காயன் தத்தனார், தமிழ் அரிச்சுவடிக்குத் தமிழ்க் கணக்கென்றும் நெடுங்கணக்கு என்றும் பெயருண்டு. ஆயம் - கூட்டம். பிள்ளைகளைக் கூட்டமாகச் சேர்த்துத் தமிழ்க் கணக்கைக் கற்பிக்கும் உபாத்தியாயர் கணக்காயர் எனப்படுவார். இவர் ஆசிரியத் தொழிலுடைய தத்தனாராவர். இவர் சுறா வேட்டையைப் பற்றி நன்கு ஆய்ந்து பின்வருமாறு கூறியுள்ளார்.
Support us by Keep Sharing the post, and Buy History Related Books from www.heritager.in
"கொல்வினைப் பொலித்த சுடர்வாய் எறியுளி
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ் தாங்கரும்
நீர்ச்சுரத்து எறிந்து வாங்குவிசைச்நெடுங்கரை யிருந்த குறுங்கால்
அன்னத்து வெண்தோடு இரியும் வீததை கானல்.” (குறுங்)
“கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்” என்ற நற்றிணை பாடல் பரதவரின் சுறா வேட்டையை உறுதிப் படுத்துகிறது.
அலைகடலில் உழந்துவாழும் பரதவர் எனும் மீனவர்கள் திமில் எனும் படகில் இருந்தபடியே, ஒரு மூங்கிலின் நுனியில் கட்டப்பட்ட கூர்மையான எறிஉளி என்னும் ஆயுதத்தை வீசி எறிந்து சுறாமீனைக் கொல்வர்.
அந்த மூங்கிலின் மறுநுனியில் கட்டிய கயிற்றால் அந்த மூங்கிலை இழுத்துத் தாம் கொன்ற மீனைக் கைக்கொள்வர், இதனால் எழும் பெரும் இரைச்சலைக் கேட்டுப் பயந்து கரையில் இருக்கும் அன்னப் பறவைகள் மிரண்டு சிறகடித்து பறக்கும் என்று கூறுகின்றார்.
கடலில் வாழும் மீனினங்களில் சுறா பெயர் போனது. இது பெரும்பாலும் கடலில்தான் காணப்படும். ஆறுகளிலும், கழிகளிலும் சிற்சில சமயங்களில் காணப்படுவதும் உண்டு. ஆறுகள் கடலோடு கலக்குங்கால், சுறாமீன்கள் கடலிலிருந்து கழி முகங்களின் வழியே ஆற்றுக்குள் சென்றுவிடும். பின்னர் ஆற் றுடன் இணையும் கழிகளிலும் புகும்.
சுறா பெரும்பாலும் கடல் நீரில், அதாவது உப்பு நீரில்தான் வாழும். கடல் நீர், ஆறுகளுக்குள் பாயும்போது குறிப்பிட்ட தொலைவு வரையில் உப்பு நீராகவே இருக்கும். உப்பு இருக்கும் வரை அதில் சுறா வாமும். உப்பு நீர் நன்னீராக மாறி விட்டபின் சுறா அந்நன்னீரில் ஒரு சில நாட்களே உயிரோடு வாழக் கூடும்.
சங்கப்பாடல்கள் பலவற்றுள் வாள் சுற குறிப்பிடப்படு கிறது. கோட்டு மீன், கோட்சுறா, வாள் வாய்ச் சுறா, எறி சுறா எனக் குறிப்பிடப்படுவது இச்சுறாவையேயாம்.
சிறிய கடற்காக்கையானது, பரதவர் மீன் வேட்டைக்குச் செல்லாமல் இருந்தால் கொம்புடைய சுறா மீன் சுற்றித் திரியும் கடற் பரப்பில் தன் பெண் துணையோடு இறால் மீன் தின்ன வருமாம்.
"கடற்சிறு காக்கை காமர் பெடையொடு கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடிபரப்பின்" எனும் பாடலும்
சுறா வேட்டையாட சென்று வலிமை மிக்க சுறா மீன் தாக்கிவிட்டது, அதனால் ஏற்பட்ட புண் ஆரிய பிறகே, என் தந்தை நீல நிறப் பெருங்கடலுக்கு (மீண்டும் மீன் பிடிக்கச்) சென்றான் என ஒரு பரதவர் கூறுகின்றார்.
"குறு. 269:3-4 வயச்சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் நீல்நிறப் பெருங்கடல் புக்கனன்"
இலக்கியத்தில் பெருமீன் என்று 'சுறா" குறிப் பிடப்படுகிறது. இவையனைத்தும் சுறாமீன்களைக் குறிப்பனவே.
ஒருவகைச் சுறாமீன்களின் தலையில், நீண்ட இருமருங்கும்- கூரிய பற்கள் உள்ள கொம்புகள் உண்டு. ஆதலின் இச்சுறா மீன் 1 "கோட்டு மீன்", " 'வாள் சுறா' என இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.
இவை ஆட்களையும் விலங்குகளையும் தனது கூரிய கொம்பினால் வீசி வீழ்த்தும். ஆதலால் எறி சுறா" எனப் பலவிடங்களிலும் வழங்கப்படுகிறது. இச்சுறா வகையைத் தமிழக மீனவர் 'வேளா' என்றழைக்கின்றனர்.
சுறா மிகவும் வன்மை வாய்ந்தது என்பது ''வயச் சுறா', ' "வயமீன்" என்ற சொற்களால் விளங்கும். இது கொல்லும் கொடுமை வாய்ந்தது என்பதற்கு. '''கோட் சுறா". * "கடுஞ் சுறா" என்று குறிப்பிடப்படுகின்றன.
ஒரு முறை அப்பெரிய வன்மீன் பிடிக்கப்படுமானால் மீனவர்கள் பிடித்த அந்த வெற்றிப் பெருமிதத்திலே மிகவும் களித்து, வேட்டைக்குப் போகாமல் ஓய்வாகச் சிலநாள் மகிழ்வுடன் கழிப்பர்.
"கொம்புள்ள சுறாமீனைப் பிடித்த பெருமகிழ்ச்சியாலே, மீண்டும் தொழிலுக்குப் போகாமல். எமது ஐயன்மார் வீட்டி லேயே தங்கி விட்டனர்'' எனப் பெருமிதத்தோடு கூறுகிறாள் மீனவர் தங்கை ஒருத்தி.
" உயர்ந்த மணலையுடைய அடைகரையில், தாம் பிடித்துக் கொண்டு வந்த மிகுந்த சுறா மீன்களைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்து மகிழ்வர்." "இதனை மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி மணம்கமழ் பாக்கத்துப் பகுக்கும்" என்ற பாடலும்,
" திமில்மேற் கொண்டு திரைச்சுரம் நீந்தி, வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி" என்ற பாடல், 'படகிலேறி ஆழ்கடல் சென்று, மீனவர் வாள் போன்ற வாயையுடைய சுறாமீன்களைப் பிடித்து அதனைத் துண்டங்களாக வெட்டிப் படகில் வைத்துக் கொண்டு கரைக்கு வந்து சேர்வர்".
சுறாக்கள் கடல் நீரில் வாழ்வன வென்றும், பேருருவின வென்றும் கொடிய பற்களையுடையன வென்றும். கொடுமை மிக்கனவென்றும், உணவில் பெருவேட்கை யுடையன வென்றும் பல நூல்கள் கூறுகின்றன.
ஆங்கில நூல்கள் பலவும் இதே கருத்தைக் கூறுவதும் அறிதற்பாலது.
சங்கப் புலவர் மக்களின் வாழ்வியலை பதிவு செய்வதில் பல மானுடவியல் அறிஞர்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளனர்.
மூலம்: சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம்
Thank You for reading, Please Like, Comment and Share to Reach more people. Heritager.in The Cultural Store is Looking for your Support.

Comments

Popular posts from this blog

எங்கள் பரவர் சமூதாயத்தை பற்றி இணையத்தில் தேடியபோது சர்மலன் தேவர் அவர்கள் தனது இனையதள பக்கத்தில் பகிர்ந்த பதிவு.