உலக புகழ்பெற்ற பரவர்களின் #சங்கு_குளித்தல்:
பரவர்களின் முத்து குளித்தல் பற்றி பேசும் நாம் அவர்கள் செய்த உலக புகழ்பெற்ற சங்கு குளித்தலை பற்றி பேச மறந்து விடுகிறோம்.
இப்பதிவில் பரவர்கள் செய்த சங்கு குளித்தலை பற்றி ஆதாரத்துடன் பார்ப்போம்.
சங்கு படுக்கைகள் கடலில் முத்து படுக்கைக்கும் பவளப்பாறைகளுக்கும் நடுவே அமைந்துள்ளது.
அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் தொடக்கம் வரை சங்கு குளித்தலுக்கு ஏற்ற காலமாகும்.
இக்காலத்தில் பரவர்கள் கடலுக்குள் மூழ்கி அடியில் ஆழமாக சென்று சங்குகளை எடுத்து மேலே வருவர்.
பரவர்கள் தாங்கள் கடலில் மூழ்கி எடுத்த சங்குகளை பரதகுல வணிகர்களுக்கு விற்று விடுவர்.
பரதகுல வணிகர்கள் சங்குகளை பெரும்பாலும் வங்காளதேசத்துக்கே ஏற்றுமதி செய்வர்.
பரவர்கள் கடலில் மூழ்கி எடுத்த சங்குகளை கொண்டு வங்காளதேசத்தில் பெண்கள் அணிவதற்கான காப்புகள் செய்யப்பட்டது.
இதுபோக வங்காளதேசத்தில் சங்குகள் கோவிலில் எக்காளம் ஊதவும் பயன்படுத்தப்பட்டது.
நான் மேற்சொன்னவை அனைத்தும் "ஜார்ஜ் ஷுர்ஹாம்மர்" என்ற உலக புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும், ஏசுசபை குருவானவரும் தமது "புனித பிரான்சிஸ் சேவியர் வாழ்க்கை வரலாறு" நூலில் பதிவு செய்தவைகளாகும்.
००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:-



Comments
Post a Comment