நாம் யார் ? நம் முன்னோர்கள் யார் ?

 

  •   நாம் யார் ? நம் முன்னோர்கள் யார் ?
    என்று ஆராய்ந்து பார்த்தால் பண்டைய காலத்தில் பாண்டிய ஆட்சியின் தலைநகரமாக "கொற்கை துறைமுகம்" கொண்டு செயல்பட்டது! கொற்கை என்றால் தூத்துக்குடி என்று பெயர் மாற்றம் பெற்றது! பண்டைய காலத்தில் மீனவர்கள் முத்துக்கள் மற்றும் பவளம் ஆகியவைகளை ஏற்றுமதி செய்தனர். அதற்கு கப்பல் போக்குவரத்து முக்கியமானது. அதற்கு உதவியாக இருந்தவர்கள் நம் மீனவ சமூகம் ! முத்து மற்றும் பவளம் அறுவரை செய்தல் , கடல் வணிகம் ,மீன்பிடித்தல், உப்பு தயாரிப்பு ஆகியவை நம் தொழில் ஆகும் . கடல் கடந்து வணிகம் செய்தல் முதலியவற்றில் சிறந்து விளங்கினார்கள். செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தனர்.ஆனால் பிற்பாடு ஏற்பட்ட அன்னிய படையெடுப்புகள் காரணமாக நம் மீனவ சமூகம் பல ஒடுக்குமுறைக்கு உட்பட்டது.
    பாண்டிய ஆட்சியின் வளர்ச்சிக்கு மிக பெரிய பங்காற்றினார்கள் நம் மீனவ முன்னோர்கள்! அதற்கு பல ஆதாரங்கள் உள்ளன! பண்டிய மன்னர்கள் கடற்கரை பிரிவு போர் பிரிவை நம் முன்னோர்கள் கொண்டு உருவாக்கினார். பிற்பாடு வந்த சோழ அரசின் கப்பல் படையில் நம் முன்னோர்கள் பணியாற்றினார்கள். இது ஒரிசா பாலு குறிப்பிட்ட தகவல் ! அவ்வளவு வலிமையான சமூகம். ஆனால் பின்னால் பல படையெடுப்புகள் காரணமாக முத்து மற்றும் பவளம் தொழில் அழிந்து தொழில் கட்டமைப்பு இழந்து வலிமை குன்றிய மீனவ சமூகமாக மாறி உள்ளது.
    நம் சமூக தொழில் கட்டமைப்பு வலுப்பெற செய்ய வேண்டும். காரணம் இப்படத்தில் உள்ள கடற்கரை ஊர்கள் ஒவ்வொன்றும் அதன் அருகில் உள்ள ஊர்களுடன் சிறு சிறு வருத்தம் மற்றும் பிரச்சினை உடன் உள்ளது.
    அனைத்து ஊர் இளைஞர்கள் கூட்டமைப்பு உருவாக்கம் செய்ய இளைஞர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால் அதில் பின் புலத்தில் சில கட்சிகள் செயல்படுகின்றனவா ? என்ற கேள்வி உருவாகிறது!
    நம் சமுதாய வளர்ச்சி என்பது கல்வி , வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், தொழில் கட்டமைப்பு , நில உரிமை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவை சார்ந்து அமையும்.
    நம் இனத்தை ஆண்ட  மன்னன் தேர் மாறன் !தூத்துக்குடி பனிமய மாதா அன்னைக்கு காணிக்கையாக தேர் செய்து தந்தவர்!
    இந்தியா சுதந்திரம் அடையும் முன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு! அதில் நம் பொழிக்கரை ஊர் இடம் பெற்றுள்ளது.வரைபடத்தில் உற்று பார்த்தால் தெரியும் .ஆனால் இந்திய அரசின் crz வரைபடத்தில் நம் ஊர் பெயர் விடுபட்டு உள்ளது.
    இதையும் ஒரு ஆவணமாக பயன்படுத்தி நம் ஊர் வாழ்விடம், படகு நிறுத்தம் செய்யும் இடம், பள்ளி, கோவில் ஆகியவைகளை இந்திய நாட்டின் CRZ வரைபடத்தில் இணைக்க வேண்டும்.

    See translation




    • பாண்டிய ஆட்சியின் முதல் தலைநகரம் கொற்கை ! கடல் கோளால் அழித்து போனது. கொற்கை பற்றிய வரலாறு எதுவும் கிடைக்கவில்லை! ஆனால் கொற்கையில் ஆதிக்கம் செலுத்திய மக்கள் பரதவர்கள்! எனவே முற்கால பாண்டிய வரலாற்றை தோற்றுவித்தவர்கள் பரதவர்களே ! பிற்கால பாண்டியர்கள் வரலாறு பற்றி சங்க இலக்கியங்களில் உள்ளன. அதில் நம் பரதவர்கள் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. பரதவர்கள் பிற்காலத்தில் தூத்துக்குடி தலைநகரமாக செயல்பட்டது.

Comments

Popular posts from this blog

சங்கத் தமிழரின் சுறா மீன் வேட்டை.

எங்கள் பரவர் சமூதாயத்தை பற்றி இணையத்தில் தேடியபோது சர்மலன் தேவர் அவர்கள் தனது இனையதள பக்கத்தில் பகிர்ந்த பதிவு.