ஏன் பரவர் நாம் கிருஸ்தவ மதத்தை தழுவி உள்ளோம் ?
பரவர்கள் கிறிஸ்தவரானதற்கான ஆதாரமும்... தனித்துவமும்...
கீழ் உள்ள புத்தகத்தின் பெயர்
A world history of Christianity...
எழுதியவர் Adrian hastings
A solid proof with year and the reason for parava's great conversion..
என்னறிவிற்கு எட்டியபடி, கீழிருக்கும் ஆங்கிலத்தின் தமிழாக்கம்...
பரவர்கள் சுதந்திரமான, கணக்கிடமுடியாத ஆண்டுகளுக்கு கடலோடிகளாக இருந்து வந்தனர். அவர்கள் பாக் ஜலசந்தி யின் இருபுறமும் கிட்டத்தட்ட 60 ஊர்களில் (கிராமங்கள் மற்றும் சில நகரங்களில்) கிட்டத்தட்ட 100 மைல்கள் கடற்கரை நீளத்திற்கு அன்றைய காலக்கட்டத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் (இராமேஸ்வரத்திற்கு அருகில்) வேம்பார் முதல் கன்னியாகுமரி வரை ( Cape Comorin) வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன்பிடித்தொழிலும், முத்துக்குளிப்பவர்களாகவும் சில வேளைகளில் கடல் வணிகம் செய்பவர்களாகவும் ( குறிப்பிட்ட சமயங்களில் கடத்தல்காரர்களாகவும்) அவர்களது தடங்கல் மிகுந்த மற்றும் வளங்களை கொணரும் தொழில்செய்வதற்கு மிகுந்த மன தைரியமும், கடலில் வளங்கள் மிகுந்தும், அளவற்ற உடல் உறுதியும் இன்னபிற உயிர்வாழும்(survival skills) திறமைகளும் தேவைப்பட்டன.
அவர்களுக்கு அவர்களது தொழில்கள் மிகுந்த திகிலான அனுபவமாய் இருந்தபோதிலும் அவர்களது தொழில் எதிரிகளான அரபு நாட்டைச் சேர்ந்த மூர்க்கமான அரேபியர்களாலும் உள்நாட்டில் அவர்களால் மதம் மாற்றப்பட்ட லப்பை முஸ்லிம்களாலும் (தமிழ்நாட்டினர்) அந்தக்காலத்தில் மிரட்டல்களும் எதிர்ப்புகளும், பரவர்களின் ஊர்களில் திடீரென்று தாக்குவதும், அடிமைப்படுத்த முயற்சித்ததும் மிக அதிகமாய் இருந்தன. இந்த விஷயத்தை போர்த்துக்கீசிய தலைமைக்கு தெரியப்படுத்துவதற்கு முக்கிய காரணம் கோழிக்கோட்டில் 1527 முதல் 1539 வரை *ஜோமரின் (zomarin of Calicut) உடனான கடல் ஆளுமைக்கான நீண்ட நெடிய போரே ஆகும். பரவர்கள் அச்சமயத்தில் வலிமை வாய்ந்த மூர்கள் மற்றும் தமிழக முஸ்லீம்களின் தாக்குதல்களைச் சமாளிக்க அப்போதுதான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த வணிகரான செட்டியாரை (John De Cruz) தங்களைப்பாதுகாக்க போர்ச்சுக்கீசியர்களிடம் உதவி கேட்க அணுகினர். அவருடன் பதினைந்து பரவர்களும் ஒன்றாக கொச்சி பயணித்து போர்ச்சுக்கீசியர்களின் வேண்டுகோளுக்கு உடன்பட்டு திருமுழுக்கு பெற்று அவர்களது பாதுகாப்பு உறுதியை பெற்று வந்தனர்.
பிறகு, மதிப்பிற்குரிய. விக்கிரம ஆதித்த பாண்டியன் ( ஜாதித்தலைவன் ) தலைமையில் எழுபது பேர் சென்றபோது, போர்ச்சுக்கீசியர்கள் தங்களுக்கு முன்னே குவிந்திருக்கும் வளங்களையும் தங்களுக்கான முத்துக்குளியின் பொருளாதார ஆதாயங்களையும் நன்றாக கேட்டறிந்து உணர்ந்து கொண்டனர்.
ஒரு வருடம் கழித்து மூன்று கட்டனர்களுடன் மன்னார் வளைகுடாவிற்கு கடல் மார்க்கமாக வந்த பொழுது கிட்டத்தட்ட மொத்த பரவர்களில் 20000 முத்துக்குளி தொழில் செய்த நபர்கள் முழுமையாக திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாக மாறியிருந்தனர். அதன் பிறகு அவர்களின் குழந்தைகளும் மனைவிகளுமாக அனைவரும் திருமுழுக்கு கொடுக்கப்பட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். 1537 ஆம் வருட இறுதியில் பரவர்கள் அனைவரும் தங்களை கிறிஸ்தவர்களாக அறிவித்தனர். இந்நேரத்தில் அரேபியர்களும் போர்ச்சுக்கீசியர்களின் எதிரிகளான ஜோமாரியர்களின் கப்பல்கள் உதவியுடன் முத்துக்குளித்துறையின் மீது கடுமையான போரை ஆரம்பித்தனர். தகுந்த நேரத்தில் போர்ச்சுக்கீசியர்களின் மூன்று கப்பல்களும் சிறிய படையுடன் அதிர்ஷ்டவசமாக முத்துக்குளித்துறையை வந்தடைந்து பரவர்களுடன் போருக்கு அணிசேர்ந்து நின்றன. மிக நீண்ட மற்றும் கொடூரமான போர் வேதாளையில் நடந்து முடிந்த பிறகு 27 ஜூன் 1538 ஆம் ஆண்டு, முஸ்லீம்களின் கூட்டுப்படைகள் பரவர்கள் மற்றும் போர்ச்சுக்கீசியப்படைகளுடன் தோல்வியைத்தழுவின. அதன்பிறகு பரவர்களும் அவர்களது முத்து வணிகமும் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பரவர்கள் வணிகத்தில் உயர்ந்து அரச குடும்பம் உட்பட முன்னணி குடும்பங்கள் செல்வச் செழிப்பு கொழித்து பொருளாதாரத்தில் முன்னேறிய சாதியாக குறிப்பாக அக்காலத்திலேயே திகழ்ந்தனர். அந்த நேரத்தில் பரவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்களாக இருந்தனர். அவர்களது வழிபாட்டு முறை இன்னமும் முழுமையான இந்து வழிபாட்டு முறையையே பின்பற்றியிருந்தனர். அவர்களது புதிய மதத்தைப் பற்றியும் அது போதிக்கும் சித்தாந்தத்தைப்பற்றியும் அவர்கள் இன்னமும் அறிந்திருக்கவில்லை.
பரவர்கள் பெயரளவில் கிறிஸ்தவர்களாக மாறிய சுமார் ஒரு தசாப்தம் (10 வருடம் or decade) பிறகு புனித பிரான்சிஸ் சவேரியார் முத்துக்குளித்துறையில் வந்து இறங்கியபோது அவருக்கு கொடுக்கப்பட்ட ஆணையானது, பரவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு கிறிஸ்தவ மத கோட்பாடுகளை போதிப்பதாகும். அவருக்கு பரவர்களுக்கு எந்தளவிற்கு கிற்ஸ்தவத்தைப்பற்றி தெரிந்திருந்ததோ அதே அளவிற்கு இந்து மற்றும் முஸ்லீம் வழிபாட்டு முறைகளைப்பற்றி தெரிந்திருந்தது. அவர், " பிற மதத்தின் கோட்பாடுகள் இறைவனால் வெறுக்கப்பட்டவை, அவரைத் தவிர அனைத்து தெய்வங்களும் பேய்கள் " என்று எழுதி வைத்துக்கொண்டு தமிழ் தெரிந்த மூன்று உதவியாளர்களை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு ஊர் ஊராக நடந்து சென்று, செபக்கூட்டங்களை கட்டியும், திருமுழுக்குப் பெறாத குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுத்தும், அவரால் கவரப்பட்டு கூட்டமான இளைஞர்கள் இரவும் பகலும் அவரை பின்தொடர்ந்து விசுவாசத்தின் அத்தியாவசியங்களை அதாவது மதம் மற்றும் பத்துக்கட்டளைகள் உள்ளிட்டவற்றை அறைகுறையான மொழிபெயர்ப்பில் பயிற்சி பெற்று வந்தனர். புனித சவேரியாருக்கு தமிழும் அதன் இலக்கணங்களும் தெரியாததால் அவரது மறைபோதறைகள் சுலபமான தமிழ் சொற்களை வைத்து சிறிது வினோதமாகவே இருந்தது... பரவர்கள் பிற இந்தியர்களைப்போல கல்வியறிவு பெற்றவர் மற்றும் கல்வியறிவற்றவர்களாய் இருந்தாலும் தாளத்தோடு சேர்ந்த சொற்பொழிவில் மிகவும் ஆர்வமாய் இருந்தனர். நாளின் இறுதியில் வழிபாட்டின் அடிப்படைகள் வராண்டாவில், உருவ வழிபாட்டின் தீமைகள் மற்றும் புனிதர்களின் இன்னுயிர் தியாகங்கள் என புனித சவேரியாரால் இடைவிடாமல் கற்பிக்கப்பட்டன.
அனைத்து கிறிஸ்தவ மறையின் அடிப்படைகளும் எழுதப்பட்டு ஒவ்வொரு ஊர்களாக ஒட்டப்பட்டன. அடுத்த நாள் காலை எழுதப்பட்டவை சத்தமாக படித்துக்காட்டப்பட்டன. ஒவ்வொரு கிராமத்திற்கும் கணக்குப்பிள்ளைகளை உருவாக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு அங்கு நிகழும் பிறப்பு இறப்பு கணக்குகள் ஆவணப்படுத்தப்பட பயிற்சியளிக்கப்பட்டது, அதன் மூலம் சமூகப் பெருமையும் ஒற்றுமையும் காக்கப்பட்டது. பிறகு, கரையார்கள், சாணார்கள், கைகோளர்கள், பள்ளர்கள் மற்றும் பறையர்கள் சாதியைச் சேர்ந்த குடும்பங்கள் திருமுழுக்குப்பெற வேண்டியபோது அவர்களும் கிறிஸ்தவத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். திருவாங்கூர் மாகாணத்திற்கு பாத்தியப்பட்ட மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்து வந்த மற்றுமொரு மீன்பிடி சாதியான 10000 முக்குவர்களும் 1544 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திருமுழுக்குப்பெற்று கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர்.
புனித சவேரியார் சில மாதங்கள் செயின்ட் தாமஸ் மலையில் (மயிலாப்பூர்) சில மாதங்கள் இருந்துவிட்டு 1545 ஆகஸ்ட்டில் மலாக்காவிற்கு புறப்படும் முன்னர், அவர் துவக்கி வைத்த சபைகளும் கணக்கெடுப்புக்களும் அவர் சென்ற பிறகும் நன்றாக நடைபெறுமென்று உறுதிபடுத்திவிட்டுச் சென்றார். இக்காலத்தில் புனித அந்தோனி கிரிமினாலி கிறிஸ்தவத்தை இராமேஸ்வரத்திற்கு அருகே போதித்த போது வேத சாட்சியாய் மரித்தார். ஹென்றி ஹென்றிக்ஸ் அவர்கள் தான் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மன அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தாலும் தூத்துக்குடியிலேயே ஐம்பது ஆண்டுகாலம் இருந்துகொண்டு கிறிஸ்தவ மறைகளை தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருதத்த எழுத்தில் கொணர்ந்த முதல் ஐரோப்பிய குருவாக திகழ்ந்தார்.
சவேரியார் முத்துக்குளித்துறையில் தனது இறுதி பார்வையிடலுக்காக 1548 ஆம் ஆண்டு வந்திறங்கிய போது பரவர்களால் மிகுந்த ஆரவாரத்துடன் அணிவகுப்போடு தூத்துக்குடி யிலிருந்த பெரிய கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பரவர்களின் கிறிஸ்தவ அடையாளம் சவேரியாரால் தொடங்கி வைக்கப்பட்டு அவர் பின் வந்த குருக்களால் வலுப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட நான்கரை நூற்றாண்டுகளாக அசைக்கமுடியாத கட்டமைப்பாய் உருவாகியுள்ளது. கிறிஸ்தவ பழக்கவழக்கங்கள் பரிணாமமடைந்த போதும் பரவர்களின் பிறப்பு வாழ்க்கைமுறையானது தொடர்ந்துகொண்டேதான் வந்தது. அதன் காரணமாக அவர்களது மதம் சார்ந்த கோட்பாடுகள் இன்னும் இந்து அல்லது பிறந்த இடம் சார்ந்த பழக்கவழக்கங்களாலேயே நிரம்பியிருந்தது. உதாரணமாக, ஜாதித் தலைவர் பரவர்களுக்கு இளவரசர் ஆயினார். காலங்கள் கடர, அவரது ஆட்சி வலிமை இன்னும் கூடிற்று. அவர்தான் அப்போதைக்கு பெரிய கோவில் அல்லது கன்னி மாதா கோவில் என்று அழைக்கப்பட்ட பனிமய மாதா கோவிலில் நடைபெறும் நம்பிக்கைக்குரிய வழிபாடுகளை / ஊர்வலங்களை முன்னின்று நடத்தினார். பனிமய மாதா அப்போதைய மகாதேவி யின் அவதாரங்களான மீனாட்சி மற்றும் காளியைப்போலொரு அவதாரமாக உருவகப்படுத்தப்பட்டார். பனிமய மாதாவின் சுரூபத்திற்கு கீழே இருந்த சிறிய சிம்மாசனத்தை பரவர்களின் தலைவர் அலங்கரித்து பனிமய மாதாவின் சுரூபத்தை வெளிக்கொணர்வார் மற்றும் அவரது திருமணம் அல்லது பதவி ஏற்புகளில் முத்துமாலை மற்றும் ஆபரணங்களான பொன் வெள்ளியால் மாதா சுரூபத்தை அலங்கரித்து வந்தார். அவர்தான் தங்கத் தேர் பவனியை ஆரம்பித்து முன்னின்று நடத்தி வைத்தார். அந்த பத்து நாட்கள் விழாவில் நவீன கலாச்சாரத்திற்குள் 1720 களில் நுழைந்து நான்கு சக்கரத்துடன் கூடிய கழுத்தில் முத்து மாலைகள் மின்னும் பனிமய மாதாவின் சுரூபம் தாங்கிய தங்கத்தேரை(rath Yatra) வருடத்திற்கு ஒருமுறை கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் மேளதாளங்கள் முழங்க, ஜெபங்களும் பாடல்களும் பாட ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி இழுக்க ஆரம்பித்தனர். பரவர்களின் சிறப்பான கிறிஸ்தவ முறைகள் அங்கிருந்த புரவலர்களால் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால் அனைத்து சபைகளும் அச்சடங்குகளை ஒப்புக்கொள்ளவில்லை.
information link : information link just click

Comments
Post a Comment